மணல் குவாரிகளுக்கு நிரந்தர தடை கோரி தூத்துக்குடி மீனவர்கள் ஸ்டிரைக்
தூத்துக்குடி: கடலோர தாதுமணல் குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி வரும் 16ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படும் கடல்தாது மணல் குவாரிகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக எங்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் ஆஷிஷ் குமாரிடம் புகார் தெரிவித்தோம்.
இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மாவட்டத்தில் மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலமாக கனிம உலகில் நடந்துவரும் பெரிய அளவிலான ஊழல் வெளிச்சத்துக்கு வரும்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மணல் சாம்ராஜ்யம் நடத்திவரும் மணல்குவாரிகள் மூலமாக 96ஆயிரம் கோடி கனிமவளம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது என்று முன்னாள் துறைமுக தலைவர் சுந்தரம் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவி மினரலுக்கு சொந்தமான குடோன்களில் 60,000 டன் கார்னெட் மணல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள இதன் மதிப்பு பல கோடி ரூபாயாகும். எனவே கடல்தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தும் ஆய்வுக்குழுவினர் குடோன்களிலும் ஆய்வு நடத்த வேண்டும்.
விவி மினரல் இதுவரை அள்ளியுள்ள மணல் அளவு குறித்தும், துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள மணல் அளவு குறித்தும் ஆய்வு நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.
ஆய்வுக்குழுவினர் விவி மினரல் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்களிலும் ஆய்வு நடத்த வேண்டும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவரும் கடல் மணல் தாது குவாரிகளுக்கு நிரத்தரமாக தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 16ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.
அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, இந்த போராட்டமானது தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு, பரதர்குல இளைஞர் கூட்டமைப்பு மற்றும் மீனவ ஐக்கிய முன்னணி சார்பில் நடத்தப்படுகிறது என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications