மொராக்கோவில், நடுவானில் விமானத்தில் பிறந்த ‘குட்டிப்பையன்’...
ரபத்: மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமானத்தில் வைத்து அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த ஞாயிறன்று, வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில் உள்ள பொலோக்னாவுக்கு புறப்பட்டது ராயல் ஏர் மொராக் என்ற விமானம். அதில், பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு விமானம் நடுவானில் பறாந்து கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
தகவல் அறிந்த விமானி, பார்சலோனா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, அங்கு தற்காலிகமாக தரை இறங்க அனுமதி கேட்டார். ஆனால், அதற்குள் விமானத்தில் வைத்தே அப்பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் பார்சலோனாவில் தரையிறங்கியது விமானம். பின்னர், அங்கிருந்த ஆம்புலன்ஸ் உதவியோடு தாயும், மகனும் சண்ட் ஜோன் டி டியு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். தற்போது தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் எடுக்காமல் திடீரென் விமானத்தில் பிறந்த அந்த ‘குட்டி' பையனால் விமானம் 50 நிமிடங்கள் தாமதமாக பொலோக்னாவிற்கு புறப்பட்டுச் சென்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications