கருத்துக் கணிப்பு: சத்தீஸ்கரில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை உருவாகக்க் கூடும் என்று இந்தியா டுடே, சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தற்போது ஆகஸ்ட் மாதம் நடைபெற்றால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இக்கருத்துக் கணிப்பின் முடிவின் படி 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் ஆளும் பாஜக 45, காங்கிரஸ் 42, பகுஜன் சமாஜ் 2 இடங்களைக் கைப்பறக் கூடுமாம்.
கடந்த தேர்தலில் பாஜக 50, காங்கிரஸ் 38, பகுஜன் 2 இடங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸும் பாஜகவும் சம அளவிலான தொகுதிகளைப் பெறும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களைப் பெறுமேயானால் அக்கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சிக்கக் கூடும்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் யார் என்ற கருத்துக் கணிப்பில் தற்போதைய பாஜகவின் ரமண்சிங்குக்கு 42% ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸின் அஜித் ஜோகிக்கு 21%, மற்றொரு காங்கிரஸ் தலைவர் சரண்தாஸ் மகந்துக்கு 12% ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications
