தாயின் கை, கால்களைக் கட்டிக் கொன்று பேரலில் அடைத்த மகன் தானும் தற்கொலை
கிருஷ்ணகிரி: தாயுடன் ஏற்பட்ட தகராறில் அவரது வாயைப் பொத்தி, கை, கால்களைக் கட்டி கொலை செய்து பின்னர் எண்ணெய் நிரப்பும் பேரலில் போட்டு அடைத்து வைத்து விட்டுத் தப்ப முயன்ற ரவுடி பொதுமக்கள் தன்னைப் பிடிக்க முயன்றதால் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை அருகேயுள்ள கொப்பகரையைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (51). அரசு பஸ் டிரைவர். இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். இவரது மகன் ஜெயக்குமார் (30). திருமணமாகி மலர்(25) என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர். ஜெயக்குமார் வேலைக்கு செல்லாமல் அடிதடி, தகராறு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வந்தார். ரவுடி லிஸ்ட்டிலும் இருந்து வந்தார்.
மகனுக்கும், அர்ச்சுணனுக்கும் ஒத்துப் போகவில்லை. இதையடுத்து தனியாக போய் விட்டார் அர்ச்சுணன். அதேசமயம், ஜெயக்குமார் தனது தாயார் ராஜம்மாள், மனைவி, குழந்தைகளுடன் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று ராஜம்மாளுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சண்டைக்குப் பின்னர் ஜெயக்குமார் வீட்டை விட்டுப் போய் விட்டார். வீட்டுக்குள் நடந்த சண்டையால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஜெயக்குமார் வேகமாக வெளியே போவதையும், வீடு பூட்டப்பட்டிருந்ததையும் பார்த்துவேகமாக உள்ளே புகுந்தனர்.
அங்கு ஒரு பேரலில் ராஜம்மாள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ராஜம்மாள் உடலை வெளியே எடுத்தபோதுதான் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்தனர். வாயைப் பொத்தி, கை, கால்களைக் கட்டிக் கொலை செய்துள்ளார் ஜெயக்குமார்.
இதையடுத்து ஜெயக்குமாரை ஊர் மக்கள் தேடினர். அப்போது அவர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததைப் பார்த்து வேகமாக சென்று அவரைப் பிடிக்க முயன்றனர். இதைப் பார்த்த ஜெயக்குமார் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீவைத்து வி்ட்டார்.
இதில் உடல் கருகி சில நிமிடங்களிலேய அவர் உயிரிழந்தார். போலீஸார் அவரது உடலையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications