''ஏய்..நீ ரொம்ப அழகா இருக்கே''... கவுன்சிலர் பதவியை இழந்த ஈரான் பெண்!
டெஹ்ரான்: மிகவும் அழகாக இருந்த ஒரே குற்றத்திற்காக ஈரானில் ஒரு பெண் கவுன்சிலரின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பேரழகு கொண்டவர்களுக்கு இங்கு வேலை இல்லை என்று அந்தப் பெண்ணுக்கு அதிகாரிகள் காரணம் கூறியுள்ளனராம்.
இத்தனைக்கும் நகராட்சித் தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் வாங்கியிருந்தார். ஆனால் ஆணாதிக்க அதிகாரிகளால் தற்போது பதவியை தொடர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

27 வயது
அவரது பெயர் நினா சியகாலி மொராடி என்பதாகும். வயது 27 ஆகிறது. குவாஸ்வின் நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றவர்.

10,000 வாக்குகள் பெற்று
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 10,000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

செல்லாது செல்லாது...
ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து, ரிசல்ட்டையும் அறிவிக்க தயாரான நிலையில் திடீரென அவர் தகுதி இழந்து விட்டதாக அறிவித்து விட்டனர்.

இவ்வளவு அழகு கூடாது...
இதற்கு அவரிடம் சொல்லப்பட்ட காரணம், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட பெண்கள் இந்த வேலைக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதாம்.

மாடல்கள் தேவையில்லை.. நகராட்சித் தலைவர்
இதுகுறித்து நகராட்சித் தலைவர் கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு கேட் வாக் போகும் மாடல்கள் தேவையில்லை என்றார்.

ஜூன் 14ல் நடந்த பஞ்சாயத்து
இந்தத் தேர்தல் ஜூன்14ம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போதுதான் மொராடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான பின்னணி குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

எதிர்ப்பாளர்களின் கருத்து...
மொராடியை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் கூறுகையில், மொராடி மிகவும் அழகானவர், இளமையானவர் என்பதால்தான் கவர்ச்சிக்கு மயங்கி ஓட்டுப் போட்டு விட்டனர். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று கூறியுள்ளனர்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications