மோடியை தவளை என்ற குர்ஷித் ஒரு கரப்பான்பூச்சி: பாஜக விளாசல்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தவளை என்று விமர்சித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பாஜக கரப்பான்பூச்சி என்று தாக்கியுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தவளை என்று விமர்சித்தார். இது குறித்து அவர் கூறுகையில், மோடி தற்போது தான் வெளியே வந்துள்ளார். முன்னதாக அவர் குஜராத்திற்குள் முடங்கி இருந்தார். தவளை தற்போது தான் கிணற்றை விட்டு வெளியே வந்துள்ளது. அவர் வெளி உலகை பார்த்து சற்று குழப்பத்தில் உள்ளார் என்று சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி கூறுகையில்,
குர்ஷித் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் போன்று இல்லை. அவர் வெளிநாட்டவர்களின் அமைச்சர் போன்று பேசுகிறார். பாகிஸ்தான் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதில் ஒரே ஒருவர் மட்டும் தான் உயிர் பிழைப்பார். அவர் தான் சல்மான் குர்ஷித். ஏனென்றால் அணு ஆயுத தாக்குதலில் இருந்து கரப்பான்பூச்சிகளால் மட்டும் தான் உயிர் பிழைக்க முடியும்.
பிறர் விமர்சிக்க எந்த பாஷையை பயன்படுத்துகிறார்களோ அதே பாஷையில் தான் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு புரிந்துகொள்ளும் சக்தி குறைவு. அதனால் அவர்களுக்கு புரியும் பாஷையில் தான் பேச வேண்டும் என்றார்.
-
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?











Click it and Unblock the Notifications