ஓடும் விமானத்தில் இருந்து குதித்த நபர்… கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஸ்பைஸ் ஜெட்
Subscribe to Oneindia Tamil

கோவாவின் போலிம் விமான நிலைய ரன்வேயில் ஸ்பைஸ் ஜெட் விமானம் டேக் ஆப் செய்ய ஓடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "விமானம் ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென, சரக்கு ஏற்றப்பட்ட பகுதியிலிருந்து ஒரு சரக்கு ஏற்றும் நபர் கீழே குதித்தார். இதையடுத்து விமானி விமானம் ஓடுவதை நிறுத்தி விட்டார்" என்றனர். நேற்று மாலை 4.45 மணிக்கு இச்சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. அந்த நபர் கீழே குதித்த வேகத்தில் ஓடி விட்டார். அவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications