இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தமிழர்கள்

இலங்கையில் தமிழர் பகுதிகளான வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், வடக்கு மாகாண கவுன்சிலுக்கு முதன் முறையாக இப்போது தேர்தல் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
1988-ல் வடகிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பின், 2006-ம் ஆண்டு இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத் தேர்தல் 2008-ல் நடைபெற்றது. இப்போது வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும், தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையே பிரதான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சில அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்ட அமைப்புகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சுயநல அரசியலில் ஈடுபட்டுவருவதாகாவும், இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை விற்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒருங்கிணைந்த அமைப்பு
இந்நிலையினை தடுக்கவும், தமிழ் அரசியல் தலைவர்கள் பொய்யான நிலைபாட்டுடன் இருந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதை தடுக்கவும், தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுவான அமைப்பாக மாற்றவும் முடிவு செய்துள்ள சில அமைப்புகள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பினரும், ஏற்கனவே இயங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்துள்ள சில அமைப்புகளும் இணைந்து போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
இரட்டை இலை சின்னம்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடியலுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் மறைந்த ஈழ தமிழர் தந்தை செல்வாவின் வழியில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இவர்கள் தங்களின் தேர்தல் சின்னமாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலையை அறிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications