சென்னையில் அரங்கேற்றம் செய்த துபாய் பள்ளி மாணவிகள்
சென்னை: சென்னையில் துபாய் பள்ளி மாணவிகள் ஜனனி மற்றும் கோபிகா ஆகியோர் 11.08.2013 அன்று மாலை வாணி மஹாலில் தங்களது நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சீதாலட்சுமி சுரேஷ் மற்றும் சுரேஷ் கிருஷ்ணன் தம்பதியரின் மகள் ஜனனி. சந்திரா மற்றும் கீதாகிருஷ்ணன் தம்பதியரின் மகள் கோபிகா. அவர்கள் இருவரும் தங்களது பரதநாட்டிய அரங்கேற்றத்தினை பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி அனைவரது பாராட்டினையும் பெற்றார்.
சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற கலைமாமணி நரசிம்மாச்சாரி தலைமை விருந்தினராக பங்கேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி. கலைமாமணி ஷோபனா ரமேஷ், ஓகேஸ்வரி சண்முகநாதன், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற துபாய் தமிழ்ச் சங்க நிறுவனப் புரவலரும், துணைத் தலைவருமான குத்தாலம் ஏ லியாக்கத் அலி, நிறுவனப் புரவலரும், பொழுதுபோக்குத்துறை செயலாளருமான ஏ முஹம்மது தாஹா, பொதுச் செயலாளர் ஜெகநாதான், துணைப் பொதுச் செயலாளர் பிரசன்னா, ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன், இணைப் பொருளாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசினை ஜனனி மற்றும் கோபிகாவிற்கு வழங்கி கௌரவித்தனர்.
பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்திய மாணவியரின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

ஜனனி, கோபிகா
அரங்கேற்ற நிகழ்ச்சியில் பாவனை செய்யும் மாணவிகள்.

மாணவிகள்
துபாயில் இருந்து வந்து சென்னையில் அரங்கேற்றம் நடத்திய மாணவிகள்.

கவிதா பிரசன்னா
புஷ்பாஞ்சலியில் துவங்கி பல்வேறு கீர்த்தனங்களைப் பாடினர். மாணவியரின் ஆசிரியை கவிதா பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற அமைந்திட வாத்தியக் கருவிகளை வாசித்து அவையோரின் பாராட்டினைப் பெற்றனர். சிகை அலங்காரத்தினை சேது மாதவன் செய்திருந்தார்.

பாராட்டு
நரசிம்மாச்சாரி, அப்துல் ரஹ்மான் எம்.பி, மற்றும் ஷோபனா ரமேஷ் ஆகியோர் மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியைப் பாராட்டினர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications