தமிழகம், புதுச்சேரியில் 48 மணி நேரத்திற்கு லேசான மழை: ரமணன் தகவல்
சென்னை: ஆந்திரா அருகே வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை தற்போது சற்று தணிந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாகவும் வானத்தில் ஏற்படட மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பல இடங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

நேற்று சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தற்போது கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் மீண்டும் பருவ மழை வலுத்துள்ளதாம். அதேசமயம், மேலடுக்கு சுழற்சியானது தற்போது தமிழக பகுதியை விட்டு நகர்ந்து விட்டதாம். எனவே பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சுழற்சி காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பலத்த மழை பெய்யும். மிக பலத்த மழை ராயலசீமாவில் பெய்யும். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சில இடங்களிலும் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று (சனிக்கிழமை) மழைபெய்யும்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். புயல் எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் மழையை எதிர்பார்க்கமுடியாது. சென்னையில் இன்று காலை முதலே வெயில் அடித்து வருகிறது. சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications