கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 அடி மண்ணுள்ளி பாம்பு பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 அடி நீளமுள்ள மண்ணுள்ளி பாம்பு பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக கேரளா எல்லை பகுதியான செங்கோட்டை வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு மணல்,அரிசி,உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்பட்டு வரும்நிலையில் தமிழகத்திலிருந்து தற்ப்போது இருதலை மணியான் என்று கூறப்படும் மண்ணுள்ளி பாம்பையும் அம்மாநிலத்திற்கு கடத்தும் செயல் அதிகரித்துள்ளது.

இன்று காலை செங்கோட்டை பேருந்து நிலையத்தில் அனாதையாக ஒரு பை இருந்ததை பார்த்து பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அந்த பையை கைப் பற்றி ஆய்வு செய்தனர் அதில் 2அடி நீளமுள்ள மண்ணுள்ளி பாம்பு இருப்பதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் பாம்பை கொண்டுபோய் வனப்பகுதியில் விட்டனர்.












Click it and Unblock the Notifications