தாதா நகரில் ஏண்டா பஸ்ஸை நிறுத்தலே... டிரைவரைப் போட்டுத் தாக்கிய அப்பா, மகன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாங்கள் சொன்ன இடத்தில் அரசுப் பேருந்தை நிறுத்ததால் கோபமடைந்த ஒரு பயணியும், அவரது மகனும் சேர்ந்து டிரைவரை தாக்கினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரையிலிருந்து போச்சம்பள்ளிக்கு யூ-16 என்ற அரசுப் பேருந்து சனிக்கிழமை போய்க் கொண்டிருந்தது. போச்சம்பள்ளியை அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்த ஒட்டுனர் வாசுதேவன் என்பவர் ஓட்டியுள்ளார்.
கொடமாண்டிப்பட்டி என்ற இடத்தில் இரண்டு பேர் பேருந்தில் ஏறினர். பேருந்து கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் தாதா நகரில் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அங்கு ஸ்டாப் இல்லை என்று கூறிய டிரைவர், வாழைத்தோட்டம் என்ற ஸ்டாப்பிங்கில் பேருந்தை நிறுத்துவதாக கூறினார்.
ஆனால் அதற்குள் கோபமடைந்த அந்த இருவரும், டிரைவர் வாசுதேவனை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் இறங்கி ஓடி விட்டனர். இதுகுறித்து வாசுதேவன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் தாக்குதல் நடத்திய இருவரையும் தேடிக் கைது செய்தனர்.
அவர்களது பெயர் பாஷா அகமது, அவரது மகன் ரபீக் என்பதாகும். இருவரையும் கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications