விஎச்பியின் அயோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு அதிரடி தடை
லக்னோ: விஸ்வ இந்து பரிஷத், பாஜக தலைவர்கள், துறவிகள் கொண்ட குழுவினர் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவைப் பார்த்து விட்டு வந்த கையோடு விஎச்பி அறிவித்த அயோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக முஸ்லீம் தலைவர்களுடன் பேசுவதாக முலாயம் சிங் யாதவ் உறுதியளித்தார் என்று இந்த தலைவர்கள் கூறியிருந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் முலாயம் தரப்பில் உடனடியாக இதை மறுத்து விட்டனர். முலாயம் சிங் முஸ்லீம் தலைவர்களுடன் இதுகுறித்துப் பேச மாட்டார், இதில் தலையிட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் அயோத்திக்கு யாத்திரை மேற்கொள்ளப் போவதாக விஎச்பி அறிவித்தது. இதற்கு உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ்தான் உ.பி. முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துறவிகள், மடாதிபதிகள் சகிதம் இந்த யாத்திரையை மேற்கொள்ளப் போவதாக விஎச்பி அறிவித்துள்ளது. ராமர்கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும்வகையில் இந்த யாத்திரைக்கு அது திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது.
முன்னதாக சமாஜ்வாடி கட்சியின் முக்கியத் தலைவரும், முலாயமுக்கு நெருக்கமானவரும், அமைச்சருமான அஸம் கான் கூறுகையில், சந்தர்ப்பவாத விஎச்பி போன்ற அமைப்புகளுடன் எங்களது தலைவர் கை கோர்க்க மாட்டார். அப்படி செய்தால் அது முஸ்லீம்களிடையே தவறான செய்தியை கொண்டு சேர்த்து விடும் என்று கூறியிருந்தார். அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே விஎச்பி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு உத்தரவு உ.பி. அரசிடமிருந்து வெளியானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications