தாது மணல் குவாரி விவகாரம் ...விவி மினரல் நிறுவனத்துக்கு ஆதரவாக குவிந்த மனுக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டுவரும் தனியார் கடல்தாது மணல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மீனவர்கள், கிராம மக்கள் ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடியிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் விவி மினரல், பிஎம்சி உள்ளிட்ட கடல்மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் சிறப்பு ஆய்வுக்குழுவினர் முதல்கட்ட ஆய்வுப்பணிகளை தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்கரையோர கடல்தாது மணல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிராமமக்கள், மீனவர்கள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்று கோரிக்கை தொடர்பான மனுக்களை சிறப்பு ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடியிடம் கொடுத்தனர். கூட்டத்தில், கலெக்டர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் விவி மினரல் தாதுமணல் குவாரிக்கு ஆதரவாகவே மனு கொடுத்தனர். ஒன்றிரண்டு மனுக்களைத் தவிர பெரும்பாலான மனுக்கள் ஆதரவாகவே கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துகேட்பு கூட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications