காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அவசியம்: வலியுறுத்திய திமுக மா.செ.க்கள்!
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் வெல்ல முடியும் என்பது திமுக மாவட்ட செயலாளர்களின் கருத்தாக வெளிப்பட்டிருக்கிறது.

தென் மாவட்டங்களில் காங். அவசியம்:
சென்னையில் சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுவாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட செயலர்கள், காங்கிரஸின் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. அதனால் தென் மாவட்டங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று கூறியுள்ளனர்.

நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி...
குறிப்பாக திருச்சி நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி என மூத்த தலைவர்களே இக்கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கின்றனர்.

ஏன் காங்கிரஸ்...?
இன்னும் சிலரோ, பாரதிய ஜனதா கட்சியோ மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்.. அதனால் என்னதான் கோபம் இருந்தாலும் தென் மாவட்ட மீனவர் சமூகம் மோடியை ஆதரிக்காமல் காங்கிரஸையே ஆதரிக்கும் என்பதால் காங்கிரஸ் கூட்டணி அவசியமானது என்று பேசியுள்ளனர்.

தேமுதிகவை நாடலாம்... கோவை மண்டலம்:
கோவை மண்டலத்தைப் பொறுத்தவரையில் கொங்கு நாடு மக்கள் கட்சி போன்ற ஜாதியக் கட்சிகளுடன் கூட்டணி அறவே கூடாது என்று பேசினாலும் தேமுதிகவின் ஆதரவை நாடலாம் என்ற தொணியில் பேசியுள்ளனர்.

தேமுதிக ஆதரவு இருந்தால் போதும்:
வட தமிழகத்து திமுக மா.செ.க்களோ பொத்தாம் பொதுவாக காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அமைந்தால் நல்லது என்றும் காங்கிரஸ் பற்றி கவலை இல்லை..... தேமுதிக ஆதரவு இருந்தால் போதும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆ.ராசா, கனிமொழி...
வழக்கமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு எம்.பிக்களை அழைப்பது இல்லை. ஆனால் இம்முறை ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications