இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா!
பெய்ஜிங்: இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ் விக்ரந்த் மற்றும் அணுசக்தியால் இயங்கும் அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டதை 'மிகப் பெரிய ராணுவ கட்டமைப்பாக' சீனா கருதுகிறது.
சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் இணையதளத்தில் இதுபற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையின் சுருக்கம்":
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் ஆகஸ்ட் 12-ந் தேதி ஐ.என்.எஸ். விக்ராந்த் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பல். ஜப்பானின் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில நாட்களிலேயே இந்தியாவும் அறிமுகம் செய்திருக்கிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய ஊடகங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா சேர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளன. இந்தியாவின் கப்பல் கட்டுமானத் துறையில் இது மைல்கல் என்றெல்லாம் பாராட்டுகின்றனர்.

ஐ.என்.எஸ். விக்ராந்த், அரிஹாந்த்
இருப்பினும் உள்நாட்டு ஆயுத தயாரிப்பில் இந்தியா எப்படி முக்கியத்துவம் காட்டுகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இந்த உள்நாட்டு போர்க் கப்பல் உருவாக்கத்துக்காக பல பில்லியன் டாலரை இந்திய அரசு முதலீடு செய்திருக்கிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக ஐ.என்.எஸ். அரிஹாந்த் என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலையும் இந்தியா அறிமுகம் செய்தது.

இந்தியாவுக்கு ஆயுதம் கொடுக்கும் வெளிநாடுகள்
சீனாவின் வலிமைக்கு இணையாக இந்தியாவை சமன்படுத்திக் கொடுக்கும் வகையில் பல நாடுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் ஆவல் என்ன என்பதை இந்தியா நன்கு அறியும். இந்திய ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் இந்தியாவின் ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கேள்வி எழுப்பும் விக்ரந்த்
ஐ.என்.எஸ். விக்ரந்த் போன்ற விமானந் தாங்கி போர்க்கப்பலால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் போக்கை மாற்றிவிட முடியாது எனினும் சில கேள்விகளை அது எழுப்பாமல் இல்லை. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து வளர்ச்சியடையாமல் போனால் ஆசிய-பசிபிக் நூற்றாண்டு என்பது சாத்தியமல்ல என்று சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாபிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆயுதப் போட்டி என்பது இந்த பிராந்தியத்தில் பதற்றத்தையே உருவாக்கும்.

ராணுவக் குவிப்பில் இந்தியா
சீனாவைப் பொறுத்தவரையில் பொருளாதார வளர்ச்சியில்தான் அக்கறை செலுத்துகிறது. இந்தியாவோ ராணுவக் குவிப்பில் அக்கறை செலுத்துகிறது. இந்தியாவின் 40% மக்கள் வறுமையில் வாடும் நிலையில் இந்தியாவின் ராணுவக் குவிப்பு சந்தேகங்களை எழுப்புகிறது. சீனா ஒருபோதும் ஆயுதப் போட்டியை ஊக்குவித்தது கிடையாது. ஆனால் சீனாவின் தேசநலன்கள் சுற்றியுள்ள நாடுகளால் சீர்குலைக்கப்பட்டே வருகின்றன.

சீனாவுக்கு எதிராக இந்தியா, ஜப்பான்
இந்தியா மற்றும் ஜப்பானின் போர்க்கப்பல் அறிமுக நடவடிக்கை சீனாவுக்கான ஒரு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications