மீண்டும் தங்கம் விலை உயர்வு… ஒரு சவரன் ரூ.24,000யைத் தாண்டியது!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து, இன்று பவுன் 24,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சவரன் 19 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதனால், நடுத்தர மக்கள் தங்கங்களை வாங்க நகைக் கடைக்கு படையெடுத்தனர்.

கடந்த ஒருவார காலமாக தங்கம் விலை தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரே நாளில் சவரன் 1000 ரூபாக்கு மேல் உயர்ந்தது. கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் விலை உயர்வு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 24,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து 3,003 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 3,212 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி ஒரு கிலோவுக்கு 260 ரூபாய் உயர்ந்து 53,265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து 57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications