சரக்கு விற்பதில் தகராறு... ரவுடி மலர்க்கொடிக்கு கத்திக்குத்து.. குணசுந்தரியும், சரவணனும் கைது!
சென்னை: டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது தொடர்பாக ஏற்பட்ட 'தொழில்' போட்டியில் பெண் ரவுடியை இன்னொரு பெண் ரவுடி கத்தியால் குத்தினார். இதையடுத்து அந்தப் பெண் ரவுடியையும், அவரது கணவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுப்பேட்டை அய்யாச்சாமி தெருவில் வசித்து வருபவர் மலர்க்கொடி. 38 வயதாகிறது. அந்த ஏரியாவில் இவர் ரவுடியாம். ரவுடி லிஸ்ட்டிலும் இருக்கிறாராம்.
இவரது தொழில் மது பான விற்பனைதான். அதாவது டாஸ்மாக் கடைகளுக்குப் போய் மதுவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான குணசுந்தரி. இவரும் மலர்க்கொடி போலத்தான். சரக்கு விற்பதில் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் மூளுமாம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார் மலர்க்கொடி. அப்போது குணசுந்தரி தனது கணவர் சரவணனுடன் அங்கு வந்தார். தெருவில் வைத்தே மூவருக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டை பின்னர் அடிதடியாக மாறியது. மலர்க்கொடியும், குணசுந்தரியும் அடித்துக் கொண்டனர். அப்போது குணசுந்தரி தனது கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மலர்க்கொடியை குத்தினார். அதேபோல சரவணனும் கத்தியைப் பிடுங்கி குத்தி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்தார் மலர்க்கொடி.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து மலர்க்கொடியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குணசுந்தரியையும், சரவணனையும் கைது செய்தனர்.
இந்த இரு பெண்களின் சண்டையால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications