நிலக்கரி கோப்புகள் மாயம்? ஏன் எப்.ஐ.ஆர் போடலை: மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ கோரும் ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சிபிஐ கோரிய ஆவணங்கள் பலவும் காணாமல் போய்விட்டது என்று கைவிரித்தது மத்திய அரசு. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு ஆவணங்களைக் காணவில்லை என்று கூறியதையும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு சிறு விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்நிலையில் நிலக்கரி கோப்புகள் மாயமானது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது கோப்புகள் மாயமானது குறித்து காவல்துறை மூலம் ஏன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் சிபிஐ விசாரணை மெதுவாக நடைபெறுவதற்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் 169 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications