நில அபகரிப்பு வழக்கு.. கருணாநிதியின் மகள் செல்வியின் உறவினர்கள் இருவர் கைது!

சென்னை நுங்கம்பாக்கம் காசி கார்டன் குமரப்ப முதலில் தெருவில் 20 கிரவுண்ட் நிலம், அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானது. இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 16 கிரவுண்ட் நிலம் செல்வியின் மருமகனின் சகோதரி உமா மகேஸ்வரி பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை ரூ8 கோடிக்கு பேசியிருக்கின்றனர். அட்வான்ஸாக ரூ1 கோடியே 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். பின்னர் இதில் ரூ1 கோடியே 50 லட்சத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஆக 16 கிரவுண்ட் நிலத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ22 லட்சம்தான். எஞ்சிய தொகையைக் கேட்டதற்கு மிரட்டினர் என்று அறக்கட்டளை நிர்வாகி யதிஸ் குப்தா போலீசில் புகார் கூறியிருக்கிறார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த பேரத்தில் எஞ்சிய தொகை தரப்படவில்லை. எந்த ஒரு நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம் என்று எதிஸ் குப்தா தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை போலீசார் செல்வியின் உறவினர்களான உமா மகேஸ்வரி, டாக்டர் சுஜய் ஆனந்த் ரெட்டி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications