புனே மருத்துவமனை லிப்ட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கற்பழிப்பு: வார்டு பாய், பாதுகாவலர் கைது

Subscribe to Oneindia Tamil

புனே: புனேவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணை கற்பழித்த வார்டு பாய் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புனேவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 26ம் தேதி அவர் போசரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த ஒரு பெண் தங்கியிருந்தார்.

கடந்த 29ம் தேதி அவர் உணவு வாங்க வெளியே சென்றுவிட்டார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த வார்டு பாயும், பாதுகாவலரும் வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் என்று கூறி அப்பெண்ணை தங்களுடன் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் அப்பெண்ணை லிப்ட்டில் வைத்து கற்பழித்தனர். இதையடுத்து கடந்த 31ம் தேதி இல்லத்திற்கு திரும்பிய அப்பெண் ஏதோ அதிர்ச்சியிலேயே இருந்தார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது வாய் பேச முடியாத அவர் சைகையில் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.

உடனே இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் வார்டு பாயும், மருத்துவமனையின் பாதுகாவலரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+