கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காததால் உயிரை மாய்த்த எம்.ஐ.டி மாணவர்
சென்னை: கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்காத விரக்தியில், எம்.ஐ.டி மாணவர் ஒருவர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக் கலைக்கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி கடந்த ஒரு மாதமாக பெரிய பெரிய நிறுவனங்கள் சார்பில் கேம்பஸ் இண்டர்வியூவில் நடைபெற்றது. இதில் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 90 பேர் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் எம்.ஐ.டி கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த ஷாகில் முகமது என்ற மாணவர் பங்கேற்றுள்ளார். ஆனால், முகமதுக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் முகமது இருந்துள்ளார். இன்று காலை குரோம்பேட்டைக்கு சென்ற அவர் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சக மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மாணவரின் சடலத்தைக் கைப்பற்றிய தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications