பல ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது பெண்ணுடன் ஆசாராம் பாபு கசமுசா: மாஜி ஊழியர் தகவல்
அகமதாபாத்: மதகுருவான ஆசாராம் பாபுவிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒருவர் அவரின் ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
மதகுருவானா ஆசாராம் பாபு மீது 16 வயது சிறுமி பாலியல் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் 15 ஆண்டுகளாக தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்த அம்ருத் பிரஜபதி பல்வேறு ரகசியங்களை தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகள்
அம்ருத் பிரஜபதி கடந்த 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அவர் தனியாக கிளினிக் வைக்க சென்றுவிட்டார்.

சூரம் விற்றார்
நான் வரும் முன்பு ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்ட சூரங்களை முறையான உரிமம் இன்றி விற்பணனை செய்து வந்தார். அவர் மோதேரா ஆற்றங்கரை அருகே சிறிய குடில் அமைத்து அங்கு தான் இருந்தார். பின்னர் அந்த இடத்தில் ஆசிரமம் கட்டப்பட்டது என்று பிரஜபதி தெரிவித்துள்ளார். தற்போது ஆசாராம் பாபுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

200 பேர் கூட
80களில் ஆசாராம் பாபுவை பார்க்க 200 பேர் கூட வந்ததில்லை. என் தொழில்நுட்ப உதவியால் அவர் தனது ஆயுர்வேத மார்க்கெட்டை விரிவுபடுத்தி பல்வேறு தயாரிப்புகளை தனது ஆதரவாளர்களுக்கு விற்பனை செய்தார் என்றார் பிரஜபதி.

25 வயது பெண்ணுடன் கசமுசா
ஒரு நாள் ஆசாராம் பாபுவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை பார்க்க அவரது அறைக்கு சென்றேன். அவரது பாதுகாவலர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால் என்னை அறைக்குள் செல்ல அனுமதித்தனர். உள்ளே சென்றபோது அங்கு ஆசாராம் தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 25 வயது பெண்ணுடன் கசமுசாவில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். அதன் பிறகே அங்கிருந்து வெளியேறினேன் என்று பிரஜபதி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications