பெங்களூர் பிதாதி அருகே காமக்கொடூரன் ஜெய்சங்கரை பார்த்து பயந்து ஓடிய டிரக் டிரைவர்

பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பியோடினான். இதையடுத்து அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவி செய்ததாகக் கூறப்பட்டது.
ஜெய்சங்கர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ராமநகரா மாவட்டத்தில் உள்ள ஹாரோஹல்லி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த டிரக்கை ஒருவர் நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளார். யாரோ லிப்ட் கேட்கிறார்கள் என்று நினைத்து டிரைவர் டிரக்கை நிறுத்த முயன்றபோது சாலையோரம் நின்ற நபர் கற்பழிப்பு குற்றவாளி ஜெய்சங்கர் என்பதை டிரைவர் அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஜெய்சங்கரைப் பார்த்து பயந்துபோன டிரைவர் டிரக்கை கிளப்பிக் கொண்டு சென்று பிதாதியை அடைந்த பிறகு போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து போலீசார் டிரைவர் கூறிய பகுதிக்கு சென்று ஜெய்சங்கரை தேடி வருகின்றனர்.
அதே சமயம் லிப்ட் கேட்டது ஜெய்சங்கராக இருக்காது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் குழு ஒன்று சேலத்திற்கு சென்று ஜெய்சங்கரின் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகிறது. ஜெய்சங்கருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications