மும்பை பலாத்கார வழக்கு - 2 குற்றவாளிகள் இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாக தகவல்

Subscribe to Oneindia Tamil

Teen telephone operator raped at Shakti Mills too subjected to unnatural sex
மும்பை: கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி மும்பையின் சக்தி மில்ஸ் பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படு் 19 வயது டெலிபோன் ஆபரேட்டர், அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவரால் இயற்கைக்குப் புறம்பான உறவுக்கும் உட்படுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த அனைத்தையும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விரிவாக கேட்டு கூடுதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக தனக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகளில் இருவர் தன்னிடம் இயற்கைக்கு மாறான உறவிலும் கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக தெரிவித்திருந்தாராம்.

தற்போது அந்தப் பெண் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு்ளார். அவருக்கு சற்று மன நிலை இயல்புக்கு வந்தவுடன் மீண்டும் அவரை விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் ஐந்து குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தையும் போலீஸார் சேகரிக்கவுள்ளனர்.

மேலும் அப்பெண்ணின் துப்பட்டாவும் காணவில்லை. அதையும் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+