சென்னையில் கழுத்தை அறுத்து தாய்–மகள் படுகொலை: 40 பவுன் நகை கொள்ளை
சென்னை: சென்னை அருகே தாய், மகளை கொன்றுவிட்டு 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு. இவர் மேட்டுக்குப்பத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20).
இன்று அதிகாலையில் சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார். வீட்டில் விமலா தேவியும், பவித்ராவும் இருந்தனர். காலை 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாமிக் கண்ணு வீட்டுக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விமலாதேவி, பவித்ரா ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
பின்னர் வீட்டில் இருந்து நகை-பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். விமலாதேவி, பவித்ரா ஆகியோர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதற்கிடையே தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சடலத்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் நகை- பணத்துக்காக தாய்-மகளை கொன்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று தெரியவில்லை.
இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications