சிரியா மீது தன்னிச்சையாக தாக்குதல் நடத்தக் கூடாது: ரஷ்ய அதிபர் புதின் 'வார்னிங்'

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் சிரியாவுக்கு கூடுதலாக ஏவுகணை பாகங்கள் விற்பனை செய்யப்படும்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று கூறுவது கேலிக்குரியது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதையே சாக்காகக் கூறி தங்கள் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படவும், தாக்குதல் நடத்தவும் முனையும் என்பது சிரியாவுக்குத் தெரியும்.
ஒருவேளை சிரியாவில் ரசாயன ஆயுதங்களை ராணுவம் பயன்படுத்தியது என்றால் அதற்கான ஆதாரங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட தகவல் எங்களால் நம்பும்படி இருக்க வேண்டும். ஆனால், அது வதந்திகளின் அடிப்படையிலோ, ரகசிய உளவாளிகள் அளிக்கும் தகவல் அடிப்படையிலோ இருக்கக் கூடாது.
ஜி-20 நாடுகளின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா என்னைத் தனியாகச் சந்திக்கவிருந்தார். அந்தச் சந்திப்பை அவர் ரத்து செய்தது வருத்தம் அளிக்கிறது. ரஷியாவுக்கு மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரை அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதேபோல் என்னை மற்றநாடுகளைத் திருப்திசெய்வதற்காக ரஷிய மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றார் புதின்.












Click it and Unblock the Notifications