For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் வந்துட்டேன்.. உங்களை விட மாட்டேன்.. விடுதலையான கற்பழிப்பு குற்றவாளி மிரட்டல்

Google Oneindia Tamil News

டெல்லி: 6 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்து பின்னர் கொலை செய்த மைனர் குற்றவாளி விடுதலையாகி வெளியே வந்த பின்னர் அந்த சிறுமியின் சகோதரி வீட்டுக்குப் போய் நான் விடுதலையாகி விட்டேன். உங்களை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டியதால் சிறுமியின் குடும்பத்தார் பீதியில் உறைந்துள்ளனர்.

டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் குற்றவாளியின் பெயர் விஷால். கடந்த 2007ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டான் விஷால். சிறுமியின் உடலை துண்டு துண்டாக்கி வெறியாட்டம் போட்டவன் இவன். பின்னர் கைது செய்யபப்பட்ட விஷால், மைனர் வயதுடையவன் என்பதால் அவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையே கிடைத்தது.

தறஅபோது விடுதலையாகி வந்து விட்டான் விஷால். விடுதலையான பின்னர் வடக்கு டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள சிறுமியின் மூத்த சகோதரி வீட்டுக்குப் போனான். வீட்டு வாசலில் நின்று கொண்டு நான் விடுதலையாகி விட்டேன். உங்களை சும்மா விட மாட்டேன். உன் தங்கைக்கு நடந்ததுதான் உனது மகளுக்கும் நடக்கும் என்று ஆவேசமாக சொல்லி விட்டுப் போயுள்ளான்.

இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தார் பெரும் பீதியில் உறைந்துள்ளனராம்.

இதற்கிடையே விஷால் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளதாம்.

சிறுமியை பலாத்காரம் செய்த பின்னர் அவளைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய விஷால், அவற்றை பொதுக் கழிப்பறையில் போய் போட்டான். அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவன் மைனர் என்று கூறி விட்டது கோர்ட்.

English summary
"I have been acquitted," says Vishal (all names changed), standing in front of his single-storey, modest house in north Delhi's Rohini area. A few hundred metres away lives a family whose six-year-old daughter was brutally raped and cut to pieces by him. The family lives in constant terror because Vishal, earlier this year, allegedly threatened to do the same to their younger daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X