For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு

By Siva
Google Oneindia Tamil News

Madras High Court lawyers to boycott work today
சென்னை: தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி தமிழக வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழை வழக்கு மொழியாக அறிவித்து அதை நீதிமன்றங்களில் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்ற சங்கங்களுடன் ஆலோசித்தது. அதன்படி அனைத்து சங்கங்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 6ம் தேதி (இன்று) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரன் தலைமையில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழை வழக்கு மொழியாக்க வலியுறுத்தி நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றை தாங்களும் 6ம் தேதி (இன்று) புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

English summary
The Madras High Court Advocates Association has called for a boycott of proceedings today over the issue of implementation of Tamil as official language in the Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X