ஈழத் தமிழர்க்காக ஜெனிவாவில் தீக்குளித்து மரணமடைந்த இளைஞருக்கு வைகோ இரங்கல்
சென்னை: ஈழத்தமிழர்களின் நலன்காக்க ஜெனிவாவில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் செந்தில்குமாரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
அனைத்துலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவைத் தட்டுவதற்காக, ஈழத் தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார்.

தமிழினத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.
இதே ஜெனீவாவில்தான் 2009- தொடக்கத்தில் முருகதாஸ் என்னும் ஈழத் தமிழ் இளைஞரும் ஈழத் தமிழினப் படுகொலையைத் தடுக்க ஐ.நா. மன்றத்தையும் மனித உரிமை ஆணையத்தையும் ஈழத் தமிழருக்கு நீதி வழங்குங்கள் என்று தனது நெஞ்சில் வடிந்த இரத்தக் கண்ணீரை உருக்கமான வேண்டுகோளாக ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து மாண்டார். இன்று வரையிலும் ஈழத் தமிழருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. உலகத்தின் மனச்சாட்சியும் விழிக்கவில்லை.
தன் உயிரை அழித்துக் கொள்வதன் மூலமாகவாவது உலகத்தின் கவனம் நீதியின் பக்கம் திரும்பாதா? கொடியவன் இராஜபக்சேவின் கொட்டம் ஒடுங்காதா? என்று தன்னைத் தானே செந்தில்குமரன் அழித்துக் கொண்டான். உலகிலேயே நாதியற்றுப் போன இனம் தமிழினம் தானா? இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தான் பலியாவதோ? என்று தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க வேண்டுகிறேன்.
தமிழீழத்தில் பிறந்து எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஜெனீவாவிலே தன் உயிரைப் பலியிட்டுக் கொண்ட செந்தில்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications