இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்
லண்டன்: இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன.

அணிவகுத்த வாகனங்கள்....
இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

மோதிக் கொண்ட வாகனங்கள்...
திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள், கார், லாரி, சரக்கு வாகனங்கள் என அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

6 பேர் பலத்த காயம்....
சுமார் 10 நிமிடத்திற்குள் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. இந்த விபத்தில் சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

போதிய வெளிச்சமில்லை....
மூடு பனி காரணமாக போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை, ஆனபோதும், வாகன ஓட்டிகள் பாலத்தைக் கடக்க முற்பட்டதே விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications