சீமாந்திரா அரசு ஊழியர்கள் கூட்டத்துக்குப் போட்டியாக ஹைதராபாத்தில் பிரமாண்ட கூட்டம்- ராவ்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவை எதிர்த்து அரசு ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு ஹைதராபாத்தில் கூட்டம் நடத்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்களுக்குப் போட்டியாக ஹைதரபாத்தில் மிகப் பிரமாண்டமான கூட்டத்தை நடத்த தற்போது தெலுங்கானா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கானா எதிர்ப்பு அரசு ஊழியர்களின் கூட்டத்தால் தெலுங்கானா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்குப் பதிலடி தரும் வகையில், இதை விட பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

சீமாந்திரா அரசு ஊழியர்கள் அதிரடி

சீமாந்திரா அரசு ஊழியர்கள் அதிரடி

சமீபத்தில் ஹைதராபாத்தில் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் திரண்டு ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

தெலுங்கானா போராட்டக்காரர்கள் அதிர்ச்சி

தெலுங்கானா போராட்டக்காரர்கள் அதிர்ச்சி

இந்த பிரமாண்ட கூட்டத்தால் தெலுங்கானா ஆதரவாளர்கள், குறிப்பாக தெலுங்கானா போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போட்டி கூட்டம்

போட்டி கூட்டம்

இதையடுத்து தற்போது பதிலடியாக இதை விட பிரமாண்டமான கூட்டத்தை ஹைதராபாத்தி் கூட்ட தெலுங்கானா போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா கிராஜ்னா சபா

தெலுங்கானா கிராஜ்னா சபா

இதுகுறித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறுகையில், இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் தெலுங்கானா கிராஜ்னா சபா என்ற பிரமாண்டக் கூட்டம் நடைபெறும். இதுகுறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

சீமாந்திரா கூட்டத்தில் விசேஷம் இல்லை

சீமாந்திரா கூட்டத்தில் விசேஷம் இல்லை

மேலும் அவர் கூறுகையில், சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் நடந்த சீமாந்திரா அரசு ஊழியர்கள் கூட்டம் விசேஷமானது அல்ல. கூட்டத்திற்கு வந்தவர்களை விட அவர்களைக் கூட்டி வந்த வாகனங்களின் டிரைவர்கள்தான் அதிகம் இருந்தனர் என்றார்.

விரைவுபடுத்த வேண்டும்

விரைவுபடுத்த வேண்டும்

ராவ் மேலும் பேசுகையில், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். சிலர் இதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அது வெற்றி பெறாது.

தெலுங்கானாவைத் தவிர வேறு வழியில்லை

தெலுங்கானாவைத் தவிர வேறு வழியில்லை

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஹைதராபாத் தெலுங்கானாவுக்கே சொந்தம். அதை தனி யூனியன் பிரதேசமாக மாற்றுவதை ஏற்க மாட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+