நிவேதிதாவைத் தேடி துபாயிலிருந்து வந்த உதவி.. முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை: அமீரக திமுக சார்பில் துபாயில் பனியாற்றும் முகம்மது முஸ்தபா, எஸ். அன்பழகன், அமுதரசன் ஆகியோர் ஏழைப் பெண் நிவேதிதாவுக்கு ரூ. 10,000 நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிதியுதவியை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நிவேதிதாவிடம் வழங்கினார்.
இந்த நிதி சென்னையைச் சேர்ந்த கூ.பி.ஜெயின் மூலமாக மா.சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர் நிவேதிதாவிடம் இந்த நிதியை அளித்தார்.
இதுதொடர்பாக கூ.பி. ஜெயின் அளித்துள்ள செய்தி...

திருவாரூர் ராஜேந்திரன் மகள் நிவேதிதா
அமீரக திமுக சார்பில் துபாயில் பனி புரியும் முகம்மது முஸ்தபா, எஸ்.எஸ்.பி. அன்பு, அமுது அரசன் ஆகிய மூவரும் இணைந்து சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருவாரூரை சேர்ந்த ஏழை தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் மகள் நிவேதிதாவின் சிகிச்சை செலவிற்காக ரூபாய் 10,000 எனக்கு அனுப்பியிருந்தார்கள் .

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்
அந்த பணத்தை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிவேதிதாவின் உடல் நிலையை மருத்துவர்களிடம் கேட்டறிந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கூறினார்.

தந்தையிடம் வழங்கினார்
பின்னர் அவருடைய தந்தை ராஜேந்திரன் அவர்களிடம் மருத்துவ செலவிற்காக ரூபாய் 10,000 வழங்கினார். அதுபோது தலைமை செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான தாயகம் கவி, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் டி.வி.சதீஸ்குமார், தலைமை கழக பேச்சாளரும்,வழக்கறிஞருமான வி.பி.ஆர்.இளம்பரிதி, மேட்டுக்குப்பம் ரமேஸ்ராஜ், மடிப்பாக்கம் சித்தன், வழக்கறிஞர் சுதாகர்,பெரம்பூர் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் வடசென்னை எழிலரசன்,பகுதி பிரதிநிதி ஜே.எஸ்.பாபு மற்றும் திமுக முகநூல் நண்பர்கள் உடனிருந்தனர்.

ஒன்இந்தியா தமிழ் செய்தி எதிரொலி
நம்முடைய ஒன்இந்தியா தமிழ் இணையத்தில் நிவேதிதா குறித்த சிறப்புச் செய்தி நிவேதிதா..!: இந்த ஏழைப் பெண்ணுக்கு உதவலாமே..
இடம் பெற்றிருந்தது. இதைப் படித்த பின்னர் இந்த நிதியுதவியை துபாய் திமுகவினர் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications