அக்காவின் கள்ளக்காதலால் அவமானம்.. அக்கம் பக்கத்தினர் கேலி செய்ததால் தங்கை தற்கொலை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனது அக்காள், கள்ளக்காதலனுடன் ஓடி விட்டதால் அவமானமடைந்ததாலும், அக்கம் பக்கத்தினர் கேலி பேசியதாலும் தங்கை கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி தேவனூர் புதூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார்.
சிவகாமியின் அக்காள் கனிமொழியும் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கனிமொழிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது கணழர், குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார் கனிமொழி.
இதனால் அக்கம் பக்கத்தினர் சிவகாமியிடம் கேலி பேசினர், துக்கம் விசாரிப்பது போல பேசினர். மேலும் கனிமொழியின் கணவரும், சிவகாமியிடம் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த சிவகாமி கனிமொழி இருக்கும் இடத்திற்குப் போய் உன்னால் எனக்கு அவமானமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட கனிமொழியோ, நான் எப்படி இருந்தால் உனக்கென்ன. நான் என் இஷ்டப்படிதான் நடந்து கொள்வேன் என்று கூறி விட்டார்.
இதனால் மேலும் அவமானமடைந்த சிவகாமி, நேராக ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications