பலமுறை வார்னிங்! கடைசியில் மகளின் காதலனுக்கு சேலை கட்டி தந்தை அரங்கேற்றிய பகீர்!
மகளை காதலித்த இளைஞனுக்கு பல முறை வார்னிங் கொடுத்தும் கேட்காததால் ஆத்திரமுற்ற பெண்ணின் தந்தை இளைஞனைப் பிடித்து பெண் போல் சேலைக்கட்டி தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இளைஞனின் தாய் அளித்த புகாரின்பேரில் தந்தை உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இளம்பெண்ணை காதலித்த இளைஞன்
குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டம் ஜோக்காரி கிராமத்தில் வசித்தவர் ஜாயேஷ் ராவல்(20). ஜாய்ஸ் அவன் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார். பல மாதங்களாக இந்தக்காதல் தொடர்ந்துள்ளது. இளம் பெண்ணின் தந்தை காளிதாஸ் மாலி அந்த ஏரியாவில் செல்வாக்கு மிக்கவர். அவருக்கு இந்த விவகாரம் தெரிய வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இளைஞர் ராவலை அழைத்து கண்டித்துள்ளார்.

கண்டிப்பை மீறி காதலை தொடர்ந்த ஜோடி
ஆனால் இளம்பெண் மீது கொண்ட காதலால், பெண்ணின் தந்தையின் கண்டிப்பை லேசாக எடுத்துக்கொண்டு தன்னுடைய காதலை இளைஞர் ராவல் தொடர்ந்துள்ளார். பெண்ணின் தந்தைக்கு தெரியாமல் ரகசியமாக தனது காதலியை சந்தித்து வந்துள்ளார். இருவரும் வயல்வெளி, மறைவான இடங்கள் என சந்திப்பை தொடர்ந்துள்ளனர்.

சிக்கிய காதல் ஜோடி
கடந்த புதன்கிழமை வழக்கம்போல் தனது காதலியை அருகில் உள்ள வயல்வெளியில் சந்தித்து ராவல் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பெண்ணின் தாயார் அதை பார்த்துவிட்டு தனது கணவர் காளிதாசுக்கு தகவல் அளித்துள்ளார். பெண்ணின் தாயார் பார்த்ததை பார்த்து பயந்து போன ராவல் தனது வீட்டுக்கு ஓடி வந்து ஒளிந்துள்ளார்.

கணவரிடம் புகார் அளித்த மனைவி அடுத்து நடந்த கொடூரம்
ராவல் அவருடைய வீட்டில் ஒளிந்து இருந்த நிலையில், தகவலறிந்த காளிதாஸ் தன்னுடன் கிரன் மாலி, மோகன் மாலி, ரமேஷ் மாலி ஆகிய மூன்று பேரை அழைத்துக்கொண்டு ராமனின் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து அவரை வெளியே இழுத்து வந்துள்ளார். பின்னர் ராவலை தாக்கியவர்கள் ராவலின் வீட்டுக்குள் இழுத்துச் சென்று அவருக்கு பெண் போல் சேலை அணிவித்து வெளியே இழுத்து வந்துள்ளனர்.

அடுத்து நடந்த கொடூரம் கிராமத்தினர் அதிர்ச்சி
சேலைக்கட்டி பெண் போல் அழைத்து வரப்பட்ட ராவலை கிராமத்தார் முன்னிலையில் அருகில் உள்ள மரத்தின் கட்டி வைத்து கடுமையாக கையாலும், கம்பாலும் தாக்கியுள்ளனர். 4 பேர்கள் தொடர்ந்து தாக்கியதில் மர்ம உறுப்பில் கடுமையாக தாக்கப்பட்டதில் ராவல் மயக்கமடைந்தார். ராகுல் தாக்கப்படுவது கண்டு தகவல் அறிந்த அவருடைய சித்தப்பா மகன் வேகமாக வந்து ராவலை காப்பாற்றியுள்ளார்.

மயக்கத்திலேயே போன உயிர்
நான்கு பேரிடம் இருந்து மீட்டு மயக்கத்தில் இருந்த அவரை முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் ராவல் எழுந்திருக்கவில்லை. மயக்கம் தெளியாமல் இருந்துள்ளார். இதனால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது
ராவல் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து அவரது தாயார் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை மற்றும் அவர்களுடன் வந்த 3 பேர் மீது அளித்த புகாரில் ராவலை தாக்கி கொலை செய்த பெண்ணின் தந்தை காளிதாஸ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராகுலை கடுமையாக தாக்கும் பொழுது அதை அங்குள்ள சிலர் வீடியோவாக எடுத்து உள்ளனர் அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications