அரியலூர் கோயிலில் 1000 வருட பழமையான மரகத லிங்கம்! கண் விழித்து பார்த்தால் ஜெயங்கொண்டத்தில் ஆச்சரியம்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்... அங்குள்ள இலையூர் என்ற கிராமத்தில் நடந்த சம்பவம், அம்மக்களுக்கு கவலையையும், கலக்கத்தையும் உண்டு பண்ணி வருகிறது.. ஆயிரம் ஆண்டுகள் பழமையான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் இப்படியா நடக்கணும்? என்று ஊரே பரபரப்பில் மூழ்கி உள்ளது.. அப்படியென்ன நடந்தது?
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இது விசாலாட்சி தெய்வத்துக்கும், காசி விஸ்வநாதருக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

அரியலூர் கோயில்
இந்த கோவிலின் கட்டிடக்கலை மிகவும் விசேஷமானது.. பழமையான சிலை சிற்பங்கள், ஓவியங்கள், மதிப்புமிக்க பூஜை பொருட்கள் இந்த கோவில் வளாகத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடங்களாக இங்கு வருகை தந்து தர்ம பூஜை செய்ய வருகின்றனர்.
இந்த கோவிலில்தான் மரகத லிங்கம் மர்மமாக தொலைந்துள்ளது.. இதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவர், கோயிலிலேயே தங்கி கோவிலை பராமரித்து வருகிறார்... அப்படித்தான் நேற்று முன்தினம் இரவு கலியபெருமாள், வழக்கம்போல் கோவிலை பராமரித்துவிட்டு கோவிலின் கருவறையை பூட்டிவிட்டு சாவியை தான் படுத்திருந்த தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கியிருக்கிறார்.
ஜெயங்கொண்டம் ஆச்சரியம்
காலை சுமார் 5 மணியளவில் எழுந்ததும், சாவி காணாமல் போயிருப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார்.. உடனே கருவறை கதவை திறக்க முயன்றபோது, அங்கே ஏற்கனவே பூட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தார்.. பிறகு உள்ளே நுழைந்தபோது மரகத லிங்கத்தையே காணாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றுள்ளார்..
இதனால் கலியபெருமாள் உடனே ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கினர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி, துணை சூப்பிரண்டு ரவிசக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
1000 வருட மரகத லிங்கம்
அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மோப்பநாய் சீமாவும் கொண்டு வரப்பட்டு சம்பவ இடத்தை தேடியது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நிற்கும் போது யாரையும் கவரவில்லை. கைரேகை நிபுணர்கள் தடங்கள் சேகரித்து, மர்ம நபர்களை அடையாளம் காண முயற்சி செய்தனர்.
காணாமல் போன மரகத லிங்கத்தின் உயரம் அரைஅடி கொண்டது.. அதன் மதிப்பு பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.. கிராம மக்கள் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியிலும், கவலையிலும் உள்ளனர்..சிலர் கோவிலின் பாதுகாப்பு முறைகள் போதுமானதா? என்றும் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்..
காலையில் கண் விழித்தால்
அந்த மரகத லிங்கம் எங்கு சென்றது, அதை எப்படி பிடிப்பார்கள் என்பதே தற்போது ஜெயங்கொண்டம் மக்களின் கவலையாக உள்ளது.. சமீபகாலமாக, கோயில் சிலைகள், லிங்கம், கலசம் போன்ற பொருட்கள் திருடு போகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், பழமையான மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரகத சிலைகள் கடத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அவற்றின் பல கோடி ரூபாய் மதிப்புதான்.. பழமையான கோவில்களில் உள்ள மரகத சிலைகளுக்கு வெளிநாட்டு கருப்பு சந்தையில் அதிக தேவை உள்ளது.
அதுமட்டுமல்லாமல், மரகதத்திற்கு சக்தி, அதிர்ஷ்டம் தரும் என்ற மத நம்பிக்கைகளும் இதுபோன்ற சிலை கடத்தலை ஊக்குவிக்கின்றன.. மொத்தத்தில், பல கிராம கோவில்களில் போதிய பாதுகாப்பு இல்லாததுதான், இதுபோன்ற கொள்ளையர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.. இந்த கொள்ளைகளை தடுக்க சிறந்த தீர்வை நம்முடைய அரசுதான் ஏற்படுத்தி தர வேண்டும்...!!!












Click it and Unblock the Notifications