அரியலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 11 பேர் உடல் சிதறி பலி.. முதல்வர் இரங்கல்.. நிவாரணம் அறிவிப்பு
அரியலூர்: கீழப்பழுவூர் அருகே வெற்றியூரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பட்டாசு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தும் அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் பட்டாசு குடோன்களிலும் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வானவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
சனிக்கிழமையன்று ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
அந்த சோகம் மறைவதற்குள்ளாக அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கீழப்பழூர் அடுத்த விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
வழக்கம் போல் இன்றும் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இன்று காலை 10 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் அப்பகுதியில் பல கி.மீ. தூரத்திற்கு எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது.
ஆலையில் சுமார் 15 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. பலரது உடல் பாகங்கள் 200 மீட்டர் தூரத்திற்கு சிதறி கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 மணி நேரம் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
பட்டாசு ஆலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்கள் எரிந்து கருகிவிட்டன. கடந்த ஆண்டு விபத்து நிகழ்ந்த இதே ஆலையில் கடந்த ஆண்டும் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலை உரிமையாளரையும் அவரது மருமகனையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ. கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications