ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது.. தமிழை புறக்கணித்ததற்கு சமம்! திமுகவை சீண்டும் ஜெயக்குமார்‌

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: இன்று அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பல்வேறு விவகாரங்களில் திமுக அரசைக் கடுமையாகச் சாடினார்.

அரியலூர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கழக அமைப்பு தேர்தல் அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்

அப்போது நீட் விவகாரம், ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் புறக்கணித்த நிலையில், அதிமுகவினர் அதில் கலந்து கொண்டனர். இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ஜெயக்குமார், தமிழக ஆளுநர் முதல்முறையாகத் தமிழ்ப் புத்தாண்டிற்காகத் தேநீர் விருந்தை அளிக்க இருந்தார் என்றும் அதைப் புறக்கணித்தது தமிழைப் புறக்கணித்ததற்குச் சமம் என்றும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

 திமுக மீது அட்டாக்

திமுக மீது அட்டாக்

மகாகவி பாரதியார் சிலை திறப்பு விழாவில் கூட திமுக கலந்து கொள்ளவில்லை என்று சாடிய ஜெயக்குமார், இது பாரதியாரை அவமதிக்கும் செயலாகவே இருப்பதாக விமர்சித்தார். தமிழ் மற்றும் தமிழ்ப் புத்தாண்டிற்கு அதிமுக கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றத் தவறியதாகவும் அவர் சாடினார்

 நீட் விவகாரம்

நீட் விவகாரம்

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தல் சமயத்தில் நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த உடன் ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சமம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் பிரசாரம் சமயத்தில் திமுகவினர் கூறினர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது பழியைப் போடவே அவர்கள் தமிழ்ப் புத்தாண்டைப் புறக்கணித்து உள்ளனர்" என்றார்.

Recommended Video

    DMK-வுக்கும் Governor-க்கும் இடையே என்ன தான் பிரச்சினை? | Oneindia Tamil
    சசிகலா

    சசிகலா

    அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து நலத்திடங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டதாகச் சாடிய ஜெயக்குமார், திமுக அரசின் ஓராண்டு ஆட்சிக்கு ஜீரோ மார்க் தான் போட முடியும் என்றும் சாடினார். அதேபோல சசிகலாவின் ஆன்மீக பயணம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் ஆன்மீக பயணம் போகலாம் என்றும் அது குறித்து கருத்து கூற முடியாது என்றும் பட்டும் படாமல் பதில் அளித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+