"கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருக்க முடியல.. அதான்".. சிறுவனை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் பகீர்
கள்ளக்காதலிக்காக 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார்
பெங்களூரு: கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருக்க முடியவில்லை என்பதற்காக, சிறுவனை கொலை செய்துள்ளார் ஆட்டோ டிரைவர்.கர்நாடக மாநிலம் ஹலசூரு பகுதியை சேர்ந்தவர் கீதா... இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை பிரிந்து விட்டார்.
கடந்த 6 வருடங்களாகவே தனியாகவே குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.. அதே பகுதியில் வீட்டு வேலை செய்து அதன்மூலம் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

கள்ளக்காதல்
இந்நிலையில், சக்திவேல் என்பவருடன் கீதாவுக்கு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.. சக்திவேல் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார்.. ஆரம்பத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பழக்கம்தான் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது... ஒருகட்டத்தில் கீதாவின் வீட்டுக்கு சக்திவேல் அடிக்கடி வந்து சென்றுள்ளார். பிள்ளைகள் வீட்டில் இல்லையென்றால், சக்திவேல் கீதா வீட்டில்தான் இருப்பாராம்.

மன உளைச்சல்
ஆனால், சக்திவேல் அடிக்கடி வீட்டுக்கு வருவதையும், தன் அம்மாவிடம் நெருங்கி பழகுவதும், கீதாவின் மகனுக்கு பிடிக்கவில்லை.. அவனுக்கு 17 வயதாகிறது.. தாயின் நடத்தை மீது அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான்.. பலமுறை தன்னுடைய அம்மாவிடமே இதை பற்றி தட்டி கேட்டுள்ளார்.. சக்திவேல் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவருடன் சண்டை போட்டுள்ளார். இதனால் சிறுவனை பார்த்தாலே சக்திவேலுக்கு எரிச்சல் வந்துள்ளது.

சண்டை
அப்படித்தான் கடந்த 4-ம் தேதி இரவு, கீதாவை பார்ப்பதற்காக சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார்... அதை சிறுவன் பார்த்துவிட்டான்.. இரவு நேரம் என்றும் பாராமல் சக்திவேலுடன் சண்டை போட்டுள்ளான்.. அதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்த வந்து சிறுவனை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கீதா, தன்னுடைய மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.. ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

விசாரணை
நடந்த சம்பவம் குறித்து ஹலசூரு பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையும் மேற்கொண்டனர்.. கீதாவிடம்தான் முதல் விசாரணையே நடந்தது.. அப்போது கீதா போலீசில் சொல்லும்போது, "எங்கள் கள்ளக்காதல் உண்மைதான்.. சக்திவேல் கத்தி எடுத்து வந்து குத்தும்போது, நான் தடுத்தேன்.. மகனை குத்திடாதே என்று கதறினேன்..

கத்திகுத்து
ஆனால், ஆத்திரத்தில் இருந்த சக்திவேல் கத்தியால் குத்திவிட்டார்" என்றார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதலி வீட்டுக்கு இயல்பாக தன்னால் வந்து செல்ல முடியவில்லை என்றும், ஒவ்வொரு முறையும் சிறுவன் தகராறு செய்து வந்ததால், ஆத்திரத்தில் கொன்றுவிட்டதாகவும் கூறினார்.. பெற்ற தாய் செய்த காரியத்தினால், சிறுவன் அநியாயமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications