Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓயாத பிரச்சனை! ஹிஜாப் அணிய அனுமதிகோரி போராட்டம்! கர்நாடகத்தில் 23 மாணவிகள் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் உப்பினங்கடி அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய அனுமதிக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த 23 மாணவிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வேறு அறையில் வைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தீர்ப்பில், ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசு பிப்ரவரி 5ல் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

இதையடுத்து கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏராளமான மாணவிகள் தேர்வும் எழுதவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான பிரச்சனை தலைத்தூக்க துவங்கி உள்ளது. அதாவது முதலில் ஹிஜாப் பிரச்சனை ஏற்பட்ட கடலோர மாவட்டங்களில் ஒன்றான தட்சிண கன்னடா மாவட்டத்தில் தான் மீண்டும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் பிரச்சனை

மீண்டும் பிரச்சனை

அதாவது சில நாட்களுக்கு முன்பு தட்சிண கன்னடா உப்பினங்கடியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் 6 மாணவிகள் கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பிறகும் போராட்டம் நடந்தது. இதேபோல் தட்சின கன்னடா மாவட்டம் மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் 12 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுதொடர்பான விபரங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

23 மாணவிகள் சஸ்பெண்ட்

23 மாணவிகள் சஸ்பெண்ட்

இதன் தொடர்ச்சியாக தற்போது உப்பினங்கடி அரசு பியூ கல்லூரி நிர்வாகம் 23 மாணவிகளை நேற்று சஸ்பெண்ட் செய்தது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை மதி்க்காமல் கடந்த வாரம் ஹிஜாப் அணிந்து வந்ததோடு, வகுப்பறையில் ஹிஜாப்புடன் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரி மேம்பாட்டு கமிட்டியின் தலைவரும் புத்துர் எம்எல்ஏவுமான சஞ்சீவ் மட்டான்டூர் கூறுகையில், ‛‛விதிகளை மீறி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+