3வது அலையா.. வெறும் 5 நாட்களில் 242 குழந்தைகளுக்கு தொற்று.. அதிர்ச்சியில் பெங்களூரு
பெங்களூருவில் குழந்தைகளை தொற்று அதிகமாக பாதித்து வருகிறது
பெங்களூரு: பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் மட்டும் 242க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... இது கர்நாடகாவில் பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.
இந்தியாவில் முதலாவது அலை கொரோனா பரவலைவிட, 2வது அலை பரவல் அதிகமானது.. இதனால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம்.
இந்த 2வது அலை பரவல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தாக்கும் வீரியம் கொண்டதாக உள்ளது.. எனவேதான் தடுப்பூசி விஷயத்தில் அந்தந்த மாநில அரசுகள் கறார் தன்மையையும், தீவிரத்தையும் காட்டியது..

பெங்களூரு
இந்நிலையில், தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் பெங்களூருவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது... இதற்கு நடுவில் 3வது அலை பரவல் வரப்போவதாக தகவல்கள் வருவதால் அம்மாநில மக்கள் கலங்கி உள்ளனர். இந்த 3வது அலை குழந்தைகளையும் தாக்கும் என்று டாக்டர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்..

குழந்தைகள்
எனவேதான், குழந்தைகளுக்கான ஸ்பெஷல் கொரோனா வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன... பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் 19 வயதுக்கு உட்பட 242 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.. அதேபோல, 3வது அலை தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்...

எச்சரிக்கை
அதுமட்டுமல்ல, இந்த கடந்த 5 நாட்களில் தொற்று உறுதியானவர்களில் 106 குழந்தைகள் 9 வயதுக்கும் குறைவானவர்கள், 136 குழந்தைகள் 9 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்தானாம்.. குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவது வருங்காலங்களில் அதிகரிக்க கூடும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது...
Recommended Video

வைரஸ்
அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாம்.. இப்போதைக்கு குழந்தைகளை இந்த வைரசிடம் இருந்து பாதுகாப்பதுதான் முக்கிய கடமையாக பெங்களூருவில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது...ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பாதிநேர ஊரடங்கை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications