மது போதையில் டான்ஸ் டீச்சர்! நாற்காலியில் கட்டி வைத்து கொடூர கொலை! கணவரிடம் விசாரணை! பகீர் பின்னணி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இளம் நடன ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்த ஆசிரியை கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கெங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் நவ்ய ஸ்ரீ (28). இவர் நடன ஆசிரியராக இருந்தார். தனது கணவர் கிரணுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

நவ்யஸ்ரீ அங்குள்ள தனியார் பள்ளியில் நடன ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி தனது தோழி ஐஸ்வர்யாவுக்கு நவ்யஸ்ரீ மெசேஜ் செய்திருந்தார். அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் நவ்யஸ்ரீயின் வீட்டிற்கு ஐஸ்வர்யா வந்திருந்தார்.
அப்போது ஐஸ்வர்யாவிடன் தனக்கு பயமாக இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நவ்யஸ்ரீ கூறியிருந்தார். மேலும், கணவர் கிரண் கொடுக்கும் தொல்லையால், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் ஐஸ்வர்யாவிடம் கூறியிருந்தார்.
இதனை அடுத்து, மற்றொரு நண்பரான அனில் என்பவருக்கும் போன் செய்து இது பற்றி நவ்யஸ்ரீ கூறியிருந்தார். அவரையும் சந்திக்க வேண்டும் என கூறி தனது வீட்டிற்கு வரவழைத்திருந்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவையும் நவ்ய ஸ்ரீயையும் இரவு 7 மணி அளவில் அனில் என்பவர் சந்தித்தார். அப்போது தனக்கும் தனது கணவர் கிரணுக்கும் இடையே நடந்த பிரச்சினைகள் நவ்யஸ்ரீ கூறியிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனில், இந்த விவகாரம் குறித்து போலீஸில் புகார் அளிக்குமாறு நவ்யாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதையடுத்து புகார் கொடுத்துவிட்டு நவ்யஸ்ரீயும் ஐஸ்வர்யாவும் வீட்டுக்கு வந்து மது அருந்திவிட்டு அறையில் தூங்கினர்.
அடுத்த நாள் காலையில் ஐஸ்வர்யா பார்த்தபோது நவ்யஸ்ரீ சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, போலீஸில் புகார் அளித்தார். இவருடைய உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் நவ்யஸ்ரீக்கும் கிரணுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் நவ்யஸ்ரீயை கணவர் கிரண், மாற்று சாவி போட்டு வீட்டை திறந்து கொலை செய்திருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. கிரணிடம் விசாரணை நடத்திய நிலையில் விசாரணையில் நவ்யஸ்ரீ கடுமையாக கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
நவ்யஸ்ரீயை நாற்காலியில் கட்டி வைத்து அவரை கொடூரமாக துன்புறுத்தியுள்ளார். பிறகு கழுத்தை அறுத்தும், நெரித்தும் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications