நிலவில் விக்ரம் லேண்டர்.. சந்திரயான் 3யால் ஹீரோவான இஸ்ரோ வீரமுத்துவேல்.. யார் இந்த தமிழர்?
பெங்களூர்: இந்தியாவில் இருந்து நிலவை ஆய்வு செய்யும் வகையில் இஸ்ரோ அமைப்பால் சந்திரயான் திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 என மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குனர்களாக இருந்து இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கியது தமிழகத்தை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் தான். குறிப்பாக நிலவின் கால்பதித்த சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குனரான வீரமுத்துவேல் யார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
விண்வெளி துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று மிகவும் முக்கிய நாளாக கருதப்படுகிறது. அதாவது நிலவின் தென்துருவத்தித்தில் சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் இன்று வெற்றிக்கரமாக தரையிறங்க உள்ளது.

இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வெற்றியை கொண்டாட இந்தியாவின் 140 கோடி மக்களும் தயாராகி வருகின்றன. நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கால்பதித்து இருந்தாலும் அவர்கள் நிலவின் தென்துருவம் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
இத்தகைய சூழலில் தான் நிலவில் கால்பதிக்கும் 4 வது நாடு மட்டுமின்றி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெறும் வகையில் விக்ரம் லேண்டர் தனது இறுதிக்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு அதில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவில் ஆய்வு பணிகளை தொடங்கும்.
அப்போது ரோவர் வாகனத்தில் இருக்கும் இந்திய தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் அடையாள சின்னம் ஆகியவை நிலவின் தென்துருவத்தில் பதிக்கப்படும். உண்மையில் இது இந்திய விண்வெளி திட்டத்தின் மிகமிக முக்கிய நாளாக பதிவு செய்யப்படும். இத்தகைய சூழலில் தான் சந்திரயான் 1 முதல் சந்திரயான் 3 வரையிலான இந்தியாவின் நிலவு பயண திட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பது நமக்கு பெருமையான விஷயமாகும்.
அதாவது நிலவை ஆய்வு செய்யும் வகையில் இந்தியா சார்பில் முதலில் சந்திரயான் 1 திட்டம் 2008 ல் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தான் நிலவு குறித்த ஆய்வுக்கு இந்தியாவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. இந்த திட்டம் திட்டமிட்டபடி வெற்றி பெற்றது. சந்திரயான் 1 விண்கலம் என்பது நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது. இந்த சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

அதன்பிறகு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முயற்சியை இந்தியா கையில் எடுத்தது. இதற்காக சந்திரயான் 2 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதாவது நிலவின் சுற்றுவட்டபாதையில் ஆர்ப்பிட்டரை வலம்வர செய்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி பிரக்யான் ரோவர் மூலம் ஆய்வு செய்வதை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டம் கடந்த 2019ல் செயல்படுத்தப்பட்டது. இதில் ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் இன்னும் சுற்றி வருகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியபோது விக்ரம் லேண்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இருப்பினும் இந்த திட்டத்தின் ஆர்ப்பிட்டர் நிலவை வலம் வருகிறது. இந்த திட்டமும் ஏறக்குறைய 90 சதவீதம் வரை வெற்றி பெற்றது. இந்த சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் தமிழகத்தின் சென்னையை சேர்ந்த வனிதா எனும் விஞ்ஞானி ஆவார்.

இதன் தொடர்ச்சியாக தான் தற்போது சந்திரயான் 3 திட்டம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஏற்கனவே சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் நிலவை வலம் வரும் நிலையில் ப்ரோபல்ஷன் மாடூல் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றை இந்த திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் விக்ரம் லேண்டர் உந்துவிசை கலனில் இருந்து ஏற்கனவே பிரிந்துள்ள நிலையில் சந்திரயான் 2 ஆர்ப்பிட்டருடன் தொடர்பையும் வெற்றிகரமாக ஏற்படுத்தியது.
சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் நிலவின் பல்வேறு இடங்கள் குறித்த விபரங்களை ஏற்கனவே இஸ்ரோவிற்கு தகவல்களாக அனுப்பிய நிலையில் அதனடிப்படையில் நிலவின் சமதளபரப்பில் இன்று சந்திரயான் - 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. விக்ரம் லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் உள்ள போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் எனும் இரு பள்ளத்தாக்கு பகுதியின் அருகே வெற்றிகரமாக இன்று தரையிறங்கியது.
அதாவது இன்று நிலவின் தென்துருவத்தில் மாலை 6.04 மணிக்கு மெதுவாக தரையிறங்கியது. இது இந்திய விண்வெளி திட்டத்தின் புதிய மைல்கல்லாகும். ஏனெ்னறால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையும், நிலவில் கால்பதித்த 4வது நாடு இந்தியா என்ற பெருமையும் இந்த திட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது.
சந்திரயான் 2 திட்டத்தின் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்றது மற்றும் 4 ஆண்டுகளால் நிலவு ஆய்வில் உள்ள சந்திரயான் 2 ஆர்ப்பிட்டர் உதவி ஆகியவற்றுடன் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குனராக இருப்பவர் விஞ்ஞானி வீர முத்துவேல். இவரும் தமிழகத்தை சேர்ந்தவர் தான். இவர் தமிழ்நாட்டின் விழுப்புரத்தை சேர்ந்தவர். விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீரமுத்துவவேல் கடந்த 1978 ல் பிறந்தார். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். பின்னர் பாலிடெக்கினில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் படித்தார். அதன்பிறகு திருச்சி கல்லூரியில் எம்இ படிப்பை முடித்த அவர் 2004 முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். சந்திரயான் 2 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குனராகி வெற்றி பெற்று இன்று ஹீரோவாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications