பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜவஹர் நவோதயா பள்ளியில்.. 32 மாணவர்களுக்கு கொரோனா உறுதி.. கதிகலங்கும் கர்நாடகா..!

33 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது... இதில் 10 மாணவிகள், 23 மாணவர்கள் அடக்கம்.. இதையடுத்து, பள்ளியில் உள்ள மற்ற மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வரை கொரோனாவைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தது.. இதையடுத்து, அந்த மாநிலமும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்ததன் அடிப்படையில் ஓரளவு பாதிப்பு குறைய ஆரம்பித்தன.

இன்றைய நிலவரப்படி 29,86,835 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. புதிதாக 282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது... இதுவரை 38,037 பேர் உயிரிழந்துள்ளனர்.. 8,430 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 13 பேர் பலியாகி உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை.. தமிழக - கேரள முதல்வர்கள் டிசம்பரில் முக்கிய மீட்டிங்.. வெளியான பரபர தகவல்முல்லைப் பெரியாறு அணை.. தமிழக - கேரள முதல்வர்கள் டிசம்பரில் முக்கிய மீட்டிங்.. வெளியான பரபர தகவல்

கர்நாடகா

கர்நாடகா

இப்படிப்பட்ட சூழலில் கர்நாடகாவில் உருமாறிய கொரோனா வைரஸ் வகையான AY.4.2. வகை கொரோனா பரவி வருகிறது... 7 பேருக்கு புதிய AY.4.2. வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது... எனவே, அங்கு 3ம் அலை தொடங்குமோ என்ற கலக்கமும் பீதியும் எழுந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான் 32 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மாணவர்கள்

மாணவர்கள்

கடந்த மாதத்தில் இருந்து தொற்று பாதிப்பு ஓரளவு குறையவும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.. அதேபோல, 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 25 ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன... 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6 ந்தேதியும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23ந் தேதியும் அரசுப் பள்ளிகள் மறுபடியும் திறக்கப்பட்டன..

 மாஸ்க்

மாஸ்க்

1 முதல் 5ம் வகுப்புகளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.. ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் செயல்படுகிறது... மாணவர்களும் மாஸ்க் போட்டுக் கொண்டுதான் வந்து போகின்றனர்.

 அதிகாரிகள்

அதிகாரிகள்

ஆனால், சில நாட்களுக்கு முன்பு கோலாரில் உள்ள கல்லூரி ஒன்றில், 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.. இந்த மாணவர்களில் சிலர் சில தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்று வந்ததாலேயே தொற்று பரவியிருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது.. இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.. அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இப்போது இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..

மடிகேரி

மடிகேரி

குடகில் உள்ள மடிகேரியில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது... இதை தொடர்ந்து பள்ளி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இங்குள்ள மாணவர்களுக்கு சிலருக்கு ஜூரம் வந்துள்ளது.. அதனால், பள்ளியில் படிக்கும் மொத்த 287 மாணவர்களிடமும் கொரோனா டெஸ்ட் நடத்தப்பட்டது. அதில்தான் 33 மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அச்சம்

அச்சம்

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 33 மாணவ, மாணவிகளும் 9-லிருந்து 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்... கொரோனா டெஸ்ட் செய்த பெரும்பாலான மாணவர்கள் தொற்று அறிகுறியற்றவர்களாகவே இருந்தனர்.. மற்ற மாணவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்... மாவட்ட சுகாதார அதிகாரி பள்ளி வளாகத்தை பார்வையிட்டார்.. பெற்றோர்களிடம் அச்சப்பட வேண்டாம் என்று தைரியம் சொன்னார்.. 32 பள்ளி மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தொற்று உறுதியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
33 students of Navodaya school in Karnataka test positive for Coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X