‛பூமராங்’.. இவ்வளவு பேரா? காங்கிரஸில் இணையும் பாஜக எம்எல்ஏக்கள்? பரபரக்கும் கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவில் எம்எல்ஏவாக உள்ளவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ல் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு தாவிய நிலையில் தற்போது பாஜகவில் இருந்து பல எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளது கர்நாடகா அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது

கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக உள்ளார். டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியுடன் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார்.

4 to 5 BJP MLAs are likely to shift to the Congress in Karnataka

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 26 தொகுதிகளை கைப்பற்றியது. மாறாக காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி வியூகங்கள் வகுத்து வருகிறது.

குறிப்பாக கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக மாவட்டங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதோடு பாஜக கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த முறை காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் பாஜகவுக்கு சென்ற 17 எம்எல்ஏக்களில் (காங்கிரஸ் 14, ஜேடிஎஸ் 3) காங்கிரஸ் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கடந்த முறை கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சென்றனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இந்த 17 பேரில் பலர் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக எம்எல்ஏவாக உள்ளனர். மாறாக பலர் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போதும் பாஜக எம்எல்ஏவாக உள்ள எஸ்டி சோமசேகர்(யஷ்வந்தபுரம் தொகுதி) பைரதி பசவராஜ் (கேஆர்புரம் தொகுதி), முனிரத்னா (ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி), சிவராம் ஹெப்பார் (உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் தொகுதி) மற்றும் ஜேடிஎஸ்ஸில் இருந்து பாஜகவுக்கு தாவி எம்எல்ஏவாக உள்ள கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட் தொகுதி) உள்பட 20 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் டிகே சிவக்குமார், முனிரத்னாவை தவிர மற்றவர்களை கட்சியில் இணைக்க ஓகே சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சில மூத்த தலைவர்கள் அவர்களை கட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது மேலிடம் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலிட தலைவர்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 4 முதல் 5 பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தவகல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் யஷ்வந்தபூர் பாஜக எம்எல்ஏ சோமசேகரின் பேச்சும் உள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் கெம்பே கவுடா லேஅவுட்டில் அவர் பேசியபோது, துணை முதல்வர் டிகே சிவக்குமார் தனது 'அரசியல் குரு' என்று பாராட்டியதோடு, அவரது தலைமை பொறுப்பு பாராட்டும் வகையில் உள்ளது'' என கூறினார். இவரது இந்த பேச்சு என்பது எஸ்டி சோமசேகர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த எம்எல்ஏக்களுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களாக பாஜகவில் இணைந்து தற்போதைய சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த மேலும் சில தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் சேர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 4 முதல் 5 எம்எல்ஏக்கள் உள்பட மாஜி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் என மொத்தம் 20 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணையலாம் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+