கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு.. ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கால் வினை.. பெங்களூரில் சோகம்
பெங்களூர்: பெங்களூரில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறுவனின் தந்தை மற்றும் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை தனது மகன் மற்றும் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள புவனேஷ்வரி நகரை சேர்ந்தவர் பல்ராஜ். இவரது மனைவி நாகலட்சுமி. பால்ராஜ் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 5 வயதில் தீரஜ் என்ற மகன் இருந்தான். ஸ்விக்கியில் வேலை செய்து வரும் பால்ராஜ், வழக்கம் போல உணவு டெலிவரியில் ஈடுபட்டு வந்தார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர், தான் ஆர்டர் செய்து இருந்த கேக்கை கேன்சல் செய்தார்.

இதையடுத்து, கேக்கை தனது வீட்டிற்கு எடுத்து வந்த பால்ராஜ், தனது 5 வயது மகன் தீரஜ்க்கு கொடுத்து இருக்கிறார். மீதம் இருந்த கேக்கை அவரும் குடும்பத்தினரும் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் கேக் சாப்பிட்ட மூன்று பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக 3 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் 5 வயது சிறுவன் தீரஜ் உயிரிழந்தான்.
பல்ராஜ் மற்றும் அவரது மனைவி நாகல்ட்சுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்து கஸ்டமர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுட் பாய்சன் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடார்பாக பெங்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தற்கொலை முயற்சியாக கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரில் உள்ள கேபி அக்ரகாரா காவல் நிலைய போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. முழுமையான விசாரணைக்கு பிறகே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்த்துள்ளனர். தற்போது கேக்கின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்ப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஸ்விக்கி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், "பெங்களூரில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பற்றியே எங்கள் எண்ணங்கள் உள்ளன. மருத்துவமனைக்கு சென்று எங்கள் நிறுவன அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வார்கள்.
இந்த விவகாரத்தில் போலீசாரின் முழு விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். உணவு பாதுகாப்புக்கு தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். அனைத்து உணவு விடுதிகளும் எங்களுடன் டெலிவரி சேவையில் இணையும் முன்பாக உணவு தர பாதுகாப்பு உரிமம் பெற்று இருப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications