அமேசான் பார்சலை திறந்த பெங்களூர் தம்பதி.. "ஹாய்" என எட்டிப்பார்த்த நாகராஜா.. என்னாச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் தம்பதி அமேசானில் ஆர்டர் செய்த பார்சலில் நல்ல பாம்பு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் வந்த பார்சலுக்குள் விஷப்பாம்பு இருக்கும் வீடியோவை அந்த தம்பதி வெளியிட்டுள்ளனர். இது காண்போரை நடுங்கச் செய்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் சார்ஜாபூரில் வசிக்கும் தம்பதியினர் தாங்கள் ஆர்டர் செய்து வாங்கிய அமேசான் பேக்கேஜில் உயிருள்ள நாகப்பாம்பை கண்டதாக கூறி அதிர வைத்துள்ளார். சாப்ட்வேர் என்ஜினியரகளான தம்பதியினர் ஆன்லைன் டெலிவரி பிளாட்ஃபார்மில் இருந்து எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தார்களாம். ஆனால் அவர்கள் பேக்கேஜைப் வாங்கிய போது ஒரு பயங்கரமான ட்விஸ்ட் காத்திருந்துள்ளது. பார்சலை திறந்ததும் நாகப்பாம்பு ஒன்று நேருக்கு நேர் அவர்கள் கண் முன்னே வந்து நின்றுள்ளது. இதை பார்த்து திடுக்கிட்ட தம்பதி உடனே அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

Bangalore amazon snake

இந்துபற்றி அந்த தம்பதி கூறுகையில், "நாங்கள் 2 நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்து வாங்க விரும்பினோம். அதனை வாங்க அமேசானில் ஆர்டர் செய்தோம். நாங்கள் வாங்கிய பேக்கில் உயிருடன் நாகப் பாம்பு இருந்தது. இதையடுத்து அந்த பேக்கேஜ்ஜை நாங்கள் உடனே டெலிவரி பார்ட்னரிடம் (பாம்பு வெளியில் விடப்படவில்லை). நடந்த முழு சம்பவத்தையும் கேமராவில் வீடியோ எடுத்து வைத்துள்ளோம். ஆர்டர் செய்த பணத்தை மழுயைமாக திரும்ப பெற்றுவிட்டோம்.

ஆனால் கொடிய விஷம் உள்ள நாகப்பாம்பைத்தான் உயிரைப் பணயம் வைத்து நாங்கள் வாங்கி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. இது அமேசானின் மோசமான அலட்சியம். மேலும் இந்த சம்பவத்திற்கு அமேசானின் மோசமான போக்குவரத்து/வேர்ஹவுஸ் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் நடநத பெரிய தவறு என்பது தெளிவாகிறது. இதற்கு யார் பொறுப்பு? பாதுகாப்பில் இவ்வளவு பெரிய பெரிய குறைபாடு சரியா? " என்று தம்பதி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனிடையே அமேசானில் ஆர்டர் பெய்த பெட்டியில் பாம்பு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் பாதி திறந்த அமேசான் தொகுப்பு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பேக்கேஜிங் டேப்பில் சிக்கிய பாம்பு ஒன்று அசைந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது.. இப்படியாக அந்த வீடியோ நிறைவுபெறுகிறது.

இதுபற்றி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த குறிப்பிட்ட அமேசான் வாடிக்கையாளர் ஒருவர், "இப்போதுதான் முழுப் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால் நடந்த சம்பவத்தற்கான இழப்பீடோ அல்லது அதிகாரப்பூர்வ மன்னிப்பு எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை. அவர்களின் வழக்கமான சம்பிரதாய வார்த்தைகளான உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று மட்டும் கூறி முடிக்ககூடாது. இந்த சம்பவத்தை எல்லா வகையிலும் அமேசான் வாடிக்கையாளர்களாகிய எங்களாலும், அவர்களின் டெலிவரி பார்ட்னராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று.
இது ஒரு மோசமான பாதுகாப்பு மீறலாகும். இதில் திருப்திகரமான தீர்வு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்று கூறினார். இதனிடையே குறிப்பிட்ட நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு , மக்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விடப்பட்டது.

சமூக ஊடகங்கள் என்ன சொல்கின்றன: ஆன்லைன் ஆர்டரில் பாம்பு இருந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினை வந்துள்ளது நாகப்பாம்பு அமேசான்களில் கூட வாழவில்லை, இது எப்படி சாத்தியம்" என்று ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார். மற்றொருவர், "அமேசான் காட்டில் இருந்து டெலிவரி செய்யப்பட்டதாக இருக்கும்" என்றார். மூன்றாவது நபர், "அமேசான் மழைக்காடுகளில் இருந்து நேரடியாக பேக்கேஜ்களை அமேசான் டெலிவரி செய்வதாகத் தெரிகிறது," என்று கூறியுள்ளார். நான்காவது நபரோ, இன்னும் ஒருபடி மேலே போய், பார்சலில் வந்தாரே அவர் நலமா? என்று பாம்பு குறித்து அக்கறையுடன்கேள்வி எழுப்பி உள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் பதில் என்ன: அமேசான் இந்தியா செய்தித் தொடர்பாளர் இமெயிலில் அனுப்பிய பதிலில் "எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களின் பாதுகாப்புக்கே நாங்கள் முதல் முன்னுரிமை தருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கான விஷயங்களைச் சரியாகச் செய்வதற்கு மேலேயும் அதற்கு அப்பாலும் செல்வதைவிட அர்ப்பணிப்பாக இருக்க விரும்புகிறோம். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனைத்து புகார்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்து, இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" இவ்வாறு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+