தலைக்கேறிய கோபம்.. மனைவியின் விரலை கடித்து தின்ற கணவர்! பரபரத்து போன பெங்களூர்! அடக்கொடுமையே!
பெங்களூர்: பெங்களூரில் தற்போது விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. தலைக்கேறிய கோபத்தில் மனைவியின் விரலை திடீரென கடித்து தின்ற கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் பின்னணியில் நடந்த சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒவ்வொரு வீட்டிலும் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்டு. இந்த வேளையில் இருவரில் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனை பெரியதாக மாறிவிடும். பெரும்பாலான குடும்பங்களில் கணவன்-மனைவி இடையே பிரச்சனை இருப்பின் அவர்களே பேசி தீர்த்து கொள்வார்கள்.

ஆனால் பெங்களூரில் குடும்ப பிரச்சனையால் கணவன் ஒருவன் மனைவியின் விரலையே கடித்து தின்று விழுங்கியிருக்கும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
பெங்களூரில் வசித்து வருபவர் விஜய் குமார். இவரது மனைவி புஷ்பா. கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் ஆன புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அதன்பிறகு சில ஆண்டுகளில் விஜய் குமார் தனது மனைவி புஷ்பாவை துன்புறுத்த தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் தலையிட்டு இருவரையும் அவ்வப்போது சமாதானம் செய்து வந்தனர். இருப்பினும் தம்பதி இடையேயான தகராறு மட்டும் முடிவுக்கு வரவேயில்லை. மனதளவிலும், உடலளவிலும் புஷ்பாவை, விஜய்குமார் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால் புஷ்பா தனது கணவரை பிரிந்து தனியாக வசிக்க தொடங்கினார். பெங்களூர் கோனனகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவர் தனியாக வீடு எடுத்து தங்கினார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் தேதி மாலையில் விஜய குமார் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து விஜய்குமாரை அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர் கேட்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த விஜய் குமார் திடீரென்று புஷ்பாவின் இடதுகையின் ஆள்காட்டி விரலை கடித்தார். மேலும் விரலை கடித்து மென்றுள்ளார். இதனால் புஷ்யாவின் விரலில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் புஷ்பா தரப்பில் கோனனகுண்டே போலீசில் புஷ்பா புகார் செய்தார் இந்த புகாரின் பேரில் போலீசார் விஜய்குமார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்திய தண்டனை சட்டம் 498 ஏ (திருமணமான பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 352 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கில் அவமதிப்பு செய்தல்), 506 (மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications