10 வருடமாக எனக்கு சம்பள உயர்வே இல்லை.. விடை தெரியாத கேள்வியுடன் விடை பெற்ற பெங்களூர் பேராசிரியர்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 10 வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வந்த உதவிப் பேராசியர் ஒருவர் தனது நேர்ந்த அநியாயம் குறித்த அனுபவத்தை லிங்க்ட்இன் தளத்தை பகிர்ந்துள்ளார். தன்னை பற்றி மாணவர்கள் பாசிட்டிவ்வான கருத்துக்களை தெரிவித்து வந்த போதிலும், சம்பள உயர்வு மட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்று பேராசிரியர் கூறியிருக்கிறார்
லிங்க்ட்இன் தளத்தில் பெங்களூரைச் சேர்ந்த 37 வயதாகும் உதவிப் பேராசிரியர் வெளியிட்ட பதிவில், "ஹாய் எனக்கு 37 வயது ஆகிறது. கிழக்கு பெங்களூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக நான் வேலை செய்து கொண்டிருந்தேன். கடந்த 10 வருடங்களாக வேலை செய்து வந்தேன்.

2019 வரை எல்லாமே என் வாழ்க்கையில் சாதாரணமாக இருந்தது. 2019ம் ஆண்டு சேர்ந்த புதிய முதல்வர் எங்கள் கல்லூரியின் 3 கிளைகளை மூடினார். நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். இந்த வேலையை செய்ய மாட்டேன்.. அந்த வேலையை செய்ய மாட்டேன் என்று நான் எப்போதுமே கூறியது இல்லை. ஆனால் சம்பளத்தை உயர்த்தி தாருங்கள் என்ற எனது கோரிக்கை ஒருபோதும் ஏற்கப்படவில்லை.
நான் கற்பித்த முறையை கண்டு மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாணவர்கள் என்னை பற்றி எப்போது சிறந்த கருத்துக்களையே கூறி வந்தார்கள். மாணவர்களுக்கு ஹேக்கத்தான்கள் மற்றும் போட்டிகளுக்கு நான் உதவினேன். பல போட்டிகளுக்கு எனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து கட்டணத்தைச் செலுத்தி இருக்கிறது. NBA மற்றும் NAAC அங்கீகாரம் தொடர்பான ஆய்வுகளின் போது, நான் கல்லுரியிலேயே தங்கியிருப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8-9 மணி வரை கூட வேலை செய்தேன்.
ஆனால் நான் எவ்வளவு முயற்சி செய்தாலும், சம்பள உயர்வு குறித்த கோரிக்கையை கல்லூரியின் புதிய முதல்வர் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் என்னைவிட ஜூனியர் ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். நான் அவர்களை போல் சம்பளம் வாங்கும் அளவிற்கு கூட துப்பில்லாமல் இருக்கிறேன். நான் என்ன தான் தப்பு செய்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் என்ன செய்கிறேன் என்று என்னுடைய கல்லூரி முழுக்க தெரியும், ஆனால் எங்கள் கல்லூரி முதல்வரோ அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
சரி, இப்படி ஆகிவருகிறதே என்று, ராஜினாமா செய்வதற்கு முன் கல்லூரி முதல்வரைச் சந்தித்துப் பேசினேன். ஆனால் ஹெச்ஓடி இல்லாததால் எதையும் தன்னோடு விவாதிக்கத் தயாராக இல்லை என்று கூறினார். இந்த ஹெச்ஓடி எப்பொழுதும் குறிப்பிட்ட 3-4 ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆதரவளிப்பார். அவர் எப்போதுமே கடினமான பணிகளை எங்களிடம் ஒப்படைத்து வந்தார். நான் இந்த குழுவினரால் விரக்தி அடைந்த அண்மையில் எனது வேலையை ராஜினாமா செய்தேன். நான் ஏன் ராஜினாமா செய்கிறேன் என்று யாரும் கேட்கவில்லை. இங்கேயே இருக்குமாறு யாருமே என்னை கேட்கவில்லை.
10 வருட வேலை முடிவில், சம்பளம் வழங்கும் முறையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், தனக்கு பிஎப் பணமும் கிடைக்கவில்லை. டிஏ 115% இல் இருந்து 30% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 85 சதவீதம் மட்டுமே அலவன்ஸ் கிடைத்தது. எனது பணிக்கொடை 50 சதவீதம் ஆக குறைந்துவிட்டது" இந்த பதிவினை 1,000-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன், "பிஎப் பணம் செலுத்தாதது சட்டவிரோதமானது. சரியான வழிகள் மூலம் கல்லூரி மீது வழக்குத் தொடர வழியைக் கண்டறியவும். உங்களுக்கு வேண்டியதை சட்டத்தின் துணையுடன் கேளுங்கள்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications