உல்லாசத்துக்கு மட்டும் பயன்படுத்துனாங்க.. மத்திய அரசு பெண் ஊழியருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட இளைஞர்
பெங்களூர்: உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் சிங் சி.ஐ.எஸ்.எப் பெண் அதிகாரி தன்னுடன் திருமணத்தை மீறிய உறவில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் அந்த பெண் அதிகாரி திருமணத்திற்கு மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டராகிராமில் கடைசியாக உருக்கமான வீடியோ வெளியிட்ட அவர், எடுத்த முடிவு அதிர வைத்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவு பலருக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. கணவனுக்கு பதில் வேறு ஒரு ஆணுடன் பெண்கள் பழகுவது, அதேபோல் மனைவியை தவிர வேறு பெண்ணுடன் பழகுவது போன்ற சிக்கல்களை தீர்ப்பது பெரிய சவாலாக உள்ளது. பெரும்பாலும் யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வில்லங்கத்தில் முடிகிறது.. அப்படித்தான் கர்நாடகா மாநிலம் மங்களூரில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதாகும் அபிஷேக் சிங் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் வசித்து வரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறதாம். அந்த பெண் மத்திய அரசு அதிகாரி. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆவார்.
இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி பழகி வந்தார்களாம்.. இதன் காரணமாக அபிஷேக் சிங், மங்களூருவுக்கு வந்து பெண் அதிகாரியை நேரில் சந்தித்தாராம். அதையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து ஜாலியாக உல்லாசம் அனுபவித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் சென்னையில் உள்ள வேலையை உதறிவிட்டு அபிஷேக் சிங் மங்களூருவுக்கு வந்து தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். அந்த வீட்டில் திருமணம் செய்யாமலேயே அவர், தனது காதலியான பெண் அதிகாரியுடன் வசித்து வந்தாராம்.
பின்னர் திருமணம் குறித்து அபிஷேக் சிங், தனது காதலியான சிஐஎஸ்எப் அதிகாரியிடம் அடிக்கடி கேட்டு வந்தாராம். அப்போது அவர் திருமணத்துக்கு மறுத்துள்ளாராம். இதனால் ஒரு கட்டத்தில் பெண் அதிகாரியிடம், அபிஷேக் சிங் திருமணத்துக்கு வற்புறுத்தினாராம்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் அதிகாரி, தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை தெரிவித்தாராம். இதனால் அபிஷேக் சிங் மனமுடைந்து போனார். மீண்டும் அவர் சென்னைக்கே சென்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார். இருப்பினும் தன்னை தனது காதலி ஏமாற்றி விட்டதாகவும், உல்லாச வாழ்க்கைக்கு மட்டும் தன்னை பயன்படுத்தி தனது வாழ்க்கையை சீரழித்து விட்டதாக புலம்பி வந்துள்ளார்.
அத்துடன் தனது காதலியான பெண் அதிகாரியிடம் செல்போனில் அழைத்து இதையே திரும்பதிரும்ப சொல்லிவந்தாராம். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த அந்த பெண் அதிகாரி, அபிஷேக் சிங்கை சரமாரியாக திட்டி இனிமேல் தனக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று கூறி கடுமையாக எச்சரித்துவிட்டு போனை வைத்துவிட்டாராம்.
இதனால் வேதனை அடைந்த அபிஷேக் சிங் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் மங்களூரு டவுன் ராவ் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட அவர், தான் இனி வாழப்போவது இல்லை என்றும், தன்னை தன்னுடைய காதலி உல்லாசத்துக்கு மட்டும் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாகவும் கூறி குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். பின்னர் விடுதியில் தான் தங்கியிருந்த அறையிலேயே உயிரைவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அபிஷேக் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கூறி அந்த பெண் அதிகாரிக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications